திருச்சி 40-வது வட்ட தி.மு.க. சார்பில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருச்சி 40 வது வட்ட தி.மு.க. சார்பில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு மகன் அருண் வழங்கினார்.;
தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த கே.என்.ராமஜெயத்தின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி 40-வது வட்ட தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நேருவின் மகன் தொழில் அதிபர் கே.என். அருண் நேரு கலந்து கொண்டு கருமண்டபம், ஆர். எம். எஸ். காலனி, பிராட்டியூர், ராம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2000 பொது மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவு தொகுப்புகளை வழங்கினார். அப்போது தி.மு.க. மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான முத்துசெல்வம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக ராம்ஜி நகர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தொழில் அதிபர் கே.என். அருண் நேருவிடம் மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் அரசு வேலை கேட்டு கோரிக்கை மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மணிகண்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா செப்டம்பர் 1 முதல் 30 வரை ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் இளங்கோ, பால சுப்பிரமணியன், ராமதாஸ், அருள்ராஜ், ஜெயராமன், இளையராஜா, புஷ்பராஜ், நாகராஜ், ராபின்சன், செல்வம், தொ.மு.ச. மணிவண்ணன், கருமண்டபம் சுரேஷ், பரமசிவம், கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.