திருச்சியில் மணிமண்டபம் கட்டும் பணியை செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குனர் ஆய்வு
திருச்சியில் மணிமண்டபம் கட்டும்பணி நடந்து வருவதை செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஆய்வு செய்தார்;
திருச்சியில் நடந்து வரும் மணிமண்டபஙு்கள் கட்டுமான பணிகளை செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுவரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார். மணிமண்டபங்களின் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து திருச்சி வரகனேரி பகுதியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தியாகி வா.வே.சு. அய்யர் நினைவு இல்லம், திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவசிலை, கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமி திருவுருவச்சிலை ஆகியவற்றையும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
அதன் பராமரிப்பு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.