கொரானா பாதித்த பகுதிகளில் மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரானா தோற்று நோய் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டனர்.

Update: 2021-05-16 11:15 GMT

 கருமண்டபம் பகுதியில் கொரானா தோற்று நோய் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு,கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தடுப்பு மருத்துவ தொகுப்பினை வழங்கினர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே என் நேரு திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மணப்பாறை துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் சிகிச்சை மையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும்தான் இருக்கிறது. ஆக்சிசன் உற்பத்தி செய்வது தொடர்பாக பெல் நிறுவனத்தில் கேட்ட போது நாங்களே வெளியில் இருந்துதான் ஆக்சிஜன் வாங்குவதாக தெரிவித்தனர்

நாங்கள் உடனே நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது என கேட்டதை அடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தோம்.இப்போது ஆக்சிஜனை உற்பத்தி பணிகள் நடந்து வருகின்றன

இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார்... இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகரச் செயலாளர் அன்பழகன் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News