திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-22 03:33 GMT

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 2 கிராம ஊராட்சி தலைவர்கள், 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 24 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்தலில் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. முடிவுகள்16-ம்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (புதன்கிழமை) இறுதி நாளாகும். இந்த பதவிகளுக்கு நேற்று வரை 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான தொலைபேசி எண் 0431- 24 10 876 ஆகும்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News