திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி இந்து அமைப்புகளுடன் ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி விழா பற்றி திருச்சியில் இந்து அமைப்புகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
திருச்சியில் மாநகர போலீஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா அரசாணை தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கண்டோன்மெண்ட சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள்தங்களது கருத்துக்களை தொிவித்தனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட சிலைகளை வைப்போம். அரசு இந்து அமைப்புகளை ஒடுக்கும் நோக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தடை அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்கள்.. அதன் பின்னர் பேசிய உதவி கமிஷனர், கூம்பு வடிவ ஒலிபெருக்கி, வௌ்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாடு என அனைத்து விதிமீறல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..