50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயங்கியது

திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேரு்ந்துகள் இயக்கப்பட்டது..

Update: 2021-05-06 17:00 GMT

தமிழக அரசு அமல்படுத்தி உள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்காமல் இருக்கும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

50 சதவீத பயணிகளை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் பெருமளவு இல்லை. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை பொருத்தவரை திருச்சி மாநகர் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், திருச்சி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். எனினும் அரசின் கட்டுப்பாடுகள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

திருச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும் நிலையில் தனியார் பேருந்துகளும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணித்தனர்.

Tags:    

Similar News