பாரத் பந்த் போராட்டத்திற்கு ஏரி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு

27-ம் தேதிபாரத் பந்த் போராட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

Update: 2021-09-24 11:00 GMT

திருச்சியில் நடந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் பூரா. விசுவநாதன் பேசினார்.

திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.  மாநிால பொதுச்செயலாளர் சண்முகம், மாநில செய்தி தொடர்பானர் வி.  அரவிந்தசாமி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய அரசுக்கு எதிரான பாரத் பந்தில் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  சென்னையில் உள்ள எழும்பூர்  ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழக விவசாயிகளின் வற்புறுத்தலின் பேரில் தமிழக முதல்வர் தலையிட்டு கர்நாடக முதல்வருடன் பேசி தற்போது தமிழகத்தில் நடந்து வரும் குறுவை சாகுபடி மற்றும் நடைபெறவுள்ள சம்பா சாகுபடிக்கு தேவையான 30 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக பெற்றுத் தர வேண்டும்.

அதே போல் மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோவதாக  இருக்கிறது. மேலும், இலவச மின்சார திட்டத்திற்கு பைசா வசூல் செய்வதாக செய்திகள் வருகிறது. எனவே, மின்சார திருத்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News