திருச்சியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-14 14:36 GMT

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை இன்று ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆட்டோ ஸ்டாண்டுகளில் 'ஓலா' ஆட்டோ டிரைவர்கள் நின்று கொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் அப்படி நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து ஓலா ஆட்டோ டிரைவர்கள் வழி போக்கில் வரும் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களது ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News