திருச்சியில் அண்ணா சிலைக்கு அ.ம.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சியில் அ.ம.மு.க. வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2021-09-15 12:00 GMT

திருச்சியில் அண்ணாசிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சியில், சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி தலைமையில்  மாலை அணிவிக்கப்பட்டது.. இதில் முன்னாள் அரசு வழக்கறிஞர் சரவணன்,ஜெ.பேரவை துணை செயலாளர் ராமநாதன், வக்கீல் தினேஷ்,  ஜெ.பேரவை தொழிற்சங்க செயலாளர் நாகநாதர் சிவகுமார், பகுதி செயலாளர்கள் கமருதீன், உறையூர் கல்நாயக் சதீஷ், ஏர்போர்ட் ரமேஷ், சாத்தனூர் வாசு, ஒத்தக்கடை செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News