திருச்சியில் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் நீதி கேட்டு போராட்டம்

டெல்லி பெண் போலீஸ் கொலையில் நீதி கேட்டு அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-09-13 15:45 GMT
திருச்சியில் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி குடிமை பாதுகாப்பு பெண் போலீஸ் அதிகாரி கொலை சம்பவத்தை கண்டித்தும்., இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க கோரியும் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மசூது முன்னிலை வகித்தார்.இதில் தமிழ் மாநில தலைவர் அ.காஜா முஹையத்தீன், தமிழ் மாநில பொது செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

Tags:    

Similar News