திருச்சியில் பெரியார் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;
தந்தை பெரியாரின் 143- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் உருவசிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலைஅணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன் மாநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பத்மநாதன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் வக்கீல் ராஜ்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போர்ட் விஜி, பூபதி, சுரேஷ் குப்தா, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார், ஜவகர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.