9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க.விற்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் ஆதரவு

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விற்கு தமிழ்நாடு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

Update: 2021-09-14 12:55 GMT

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுச்செயலாளர் இடி முரசு இஸ்மாயில் அமைச்சர் நேருவிடம் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கவிற்கு ஆதரவு  தெரிவித்து கடிதம் வழங்கினார்.

தமிழ்நாடு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே .என் .நேருவை திருச்சியில் சந்தித்து பேசினார்.

அப்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களது இயக்கம் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறியதோடு அதற்கான ஆதரவு கடிதத்தையும் கொடுத்தார். அந்த கடிதத்தில் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி நடத்தி வரும் தி.மு.க. விற்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் ஆதரவு அளித்து தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளோம் .சட்டமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலான வெற்றி கூட்டணிக்கு ஆதரவு கடிதத்தை ஏற்கனவே வழங்கி பணியாற்றினோம். தங்களின் பொற்கால ஆட்சி தொடர என்றும் துணை நிற்போம்' என கூறப்பட்டிருந்தது.

இடிமுரசு இஸ்மாயிலுடன் கட்சியின் மாவட்ட செயலாளர் ரபீக்ராஜா, ஊடகப்பிரிவு செயலாளர் முஸ்தபா ஆகியோர் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News