+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்

+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Update: 2021-06-03 05:59 GMT

பிளஸ்- 2  தேர்வு நடத்துவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான  கருணாநிதியின் 98 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

இரண்டு நாட்களில் கல்வியாளர்கள். பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரிய அமைப்புகள் மருத்துவ நிபுணர் குழு, தோழமை கட்சியினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு இரண்டு நாட்களில் தெரிவிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கருத்தின் அடிப்படையில் ஆலோசனை செய்து நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெறும் CEO, DEO மற்றும் கல்வியாளர்கள் கருத்தின் அடிப்படையில் நாளை மறுநாள் காலை முதலமைச்சரிடம் அனைத்து கருத்துக்களும் தெரிவிக்கப்படும்.இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் இறுதி முடிவை எடுப்பார்.

கிராமப்புற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் மற்றும் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தெரிவிக்கலாம்.

ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்தோமோ அதை போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் நல்ல முறையில் மதிப்பெண் கொடுக்கப்படும் என பிரதமர் சொல்லி இருக்கிறார்?

அது எந்த முறையில் என தெரியவில்லை. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்தனர்.

ரமேஷ் போக்ரியால் அனுப்பிய கடிதத்தில் கூடதேர்வுகளை எப்படி நடத்தலாம் என்று தான் கருத்து கேட்டார்களே? தவிர தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த கருத்தும் இல்லை.

ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். முதல்வர் சொன்னபடி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும் முக்கியம். ,இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News