திருச்சி புத்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு பிரசாரம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு வீடு, வீடாக தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.;

Update: 2021-03-22 09:30 GMT

திருச்சி மேற்கு சட்டமன்ற வேட்பாளர் கே.என்.நேரு இன்று புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது.

உங்களின் முன்னேற்றம், உங்களுக்கு தேவையானவற்றை செய்வதற்காகதான் நான் இருக்கிறேன். சென்னை ஆலந்தூரில் 40 ஆயிரம் பிராமணர்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.பாரதி எவ்வாறு இருந்து வருகிறாரோ,

அதே போல இங்குள்ளவர்களின் உயர்வுக்கு நான் பாடுபடுவேன். நானும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவன்தான் எனவே உங்களின் ஆதரவை எனக்கு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். உடன் பகுதி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News