பொங்கல் பண்டிகையின் போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக திருச்சி மன்னார்புரம், மத்திய பேருந்துநிலையம் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 14ம்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வெளியூரிலிருந்து திருச்சிக்கு வரும் போக்குவரத்தினால் திருச்சி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு சவுகரியமான வகையில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்திலும், ராமேஸ்வரம், காரைக்குடி செல்லும் பேருந்துகள் இலுப்பூர் சாலையிலும், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்துநிலையம் அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமாக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
இவ்விரு தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீர், பயணிகள் இருக்கை, கழிவறை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுடன் வருகிற 19ம் தேதி வரை செயல்படக்கூடிய இந்த தற்காலிக பேருந்து நிலையத்தினை மாநகர காவல்துறை துணைஆணையர் வேதரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்துகழக அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.