திருச்சியில் காரில் வந்த வாலிபர் கொலை? உடல் காவிரி ஆற்றில் வீச்சு

திருச்சிக்கு காரில் வந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2021-09-09 15:34 GMT

திருச்சி ஓயாமாரி சுடுகாடு எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில்  இன்று இரவு  7 மணியளவில் ஒரு ஆண் உடல் மிதந்து வந்தது. கரை ஓரமாக இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து கரை ஓரத்தில் இழுத்து போட்டனர்.

இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று மதியம் முதல் காவிரி ஆற்றின் பாலத்தில் ஒரு கார் அனாதையாக கேட்பாரற்ற நிலையில் நின்றதால், இறந்தவருக்கும், இந்த காருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? அல்லது வேறு ஏதும் காரணமா?  காரில் வந்த வாலிபரை கொலை செய்து காவிரி ஆற்றில் யாராவது வீசினார்களா? என பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News