உலக இதய தினத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு

உலக இதய தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் சிகப்பு வண்ண விளக்கு களால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-09-29 06:00 GMT

சிவப்பு விளக்கினால் மிளரும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதயம் வெறும் காதல் சின்னம் மட்டும் அல்ல. அதையும் தாண்டி நம் உடலில் ஒரு முக்கிய உயிரோட்டமான பகுதியாக இதயம் உள்ளது. நம் அனைவரின் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தத்தை இருதயம் அனுப்பி வைத்து உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவி செய்கிறது.

இந்த இதயத்தை பாதுகாக்க, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக இதய தினம் என்று இந்த நாளை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் தனியார் அமைப்பு சார்பில் சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி னர்.

இந்த சிகப்பு வண்ண விளக்குகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மிளிர செய்து பொதுமக்களுக்கு ரயில்வே ஜங்ஷனில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News