திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் பேரணி

75-வது சுதந்திர அமுதவிழாவையொட்டி திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.;

Update: 2021-10-03 02:25 GMT

திருச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.

நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெரு விழாவினை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் அண்ணா நகர் உழவர் சந்தை இணைப்பு சாலையில் விழிப்புணர்வு யோகாசன பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

அதைத்தொடர்ந்து அண்ணா நகர் சந்திப்பு இணைப்பு சாலையில் இருந்து தென்னூர் அறிவியல் பூங்கா வரை விழிப்புணர்வு மகளிர் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News