முதன்முறையாக திருச்சி வந்த மாலத்தீவு விமானத்துக்கு வரவேற்பு

மாலத்தீவில் இருந்து முதன்முறையாக திருச்சி வந்த விமானத்துக்கு 'வாட்டர் சல்யூட்' மூலம் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-06-26 04:21 GMT

மாலத்தீவில் இருந்து முதன்முறையாக திருச்சி வந்த விமானத்துக்கு 'வாட்டர் சல்யூட்' மூலம் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


திருச்சி:

மாலத்தீவில் இருந்து முதன்முறையாக திருச்சி வந்த விமானத்துக்கு 'வாட்டர் சல்யூட்' மூலம் உற்சாகமாக வாட்டர் சல்யுட் முலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு உள்ளூர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.


வெளிநாடுகளுக்கு வந்தே பாரத திட்டத்தின் கீழ் மட்டுமே தற்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு புதிதாக ஒரு வழித் தடத்தில் இருந்து வரும் விமானங்களுக்கும், பயணிகளுக்கும் வரவேற்பு அளிக்கப்படும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மாலத்தீவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் இன்று முதன்முறையாக திருச்சி வந்தது.


இந்த விமானத்திற்கு திருச்சி விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தன. அதேபோல் இதில் வந்த பயணிகளுக்கும் பூங்கொத்து கொடுத்து விமான நிலைய ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News