மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம்: கருத்தரங்கில் தகவல்

மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம் என்று, திருச்சியில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

Update: 2021-09-11 04:15 GMT

டாக்டர் மாத்ருபூதம்

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளி, லலிதா நர்சிங் ஹோம் மற்றும் சியாமளா நர்சிங் ஹோம் இணைந்து 'பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியமும் கல்வி கற்கும் சூழலும்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடந்தது. இதில், பள்ளி செயலாளர் முனைவர் மீனா, தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குனர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், டாக்டர் மாத்ருபூதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், குழந்தைகளின் மன இறுக்கம், சோர்வு குறைவதற்கு, பெற்றோரின் அரவணைப்பும், ஆதரவும் அவசியம் தேவை. குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி சூழ்நிலைகளை விளக்கி சொல்ல வேண்டும். உன்னால் முடியும் பயப்படாதே என்று கூறவேண்டும். குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் கைகோர்த்து செயல்பட்டால் நல்லது என்றார்.

கருத்தரங்கில், பள்ளி முதுநிலை முதல்வர் பத்மா, முதல்வர் பொற்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் ரேகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News