திருச்சி-இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
திருச்சியில் நடந்த இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
திருச்சி வயர்லெஸ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்த அமைப்பின் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் கோ.சங்கர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இமானுவேல் சேகரனார் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருச்சி மாவட்ட தி மு.க. துணை செயலாளர் குடமுருட்டி சேகர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.