திருச்சி குட்ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

திருச்சி குட் செட்டில் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-09-24 14:45 GMT

திருச்சியில் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் செயல்படும் ரயில்வே குட்ஷெட் யார்டில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் அரிசி, கோதுமை, உரம் மற்றும் நிலக்கரி போன்ற பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இங்கிருந்து லாரிகள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு லோடு ஏற்றுவதற்கு வரும் இந்த லாரிகள் நிறுத்துவதற்கு ஏதுவாக ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் காலி இடம் அங்கு உள்ளது.

இந்த இடத்தை லாரி உரிமையாளர்கள் சிலர் ஒன்றிணைந்து குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் திருவேங்கடம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டது. இதற்கு ஆரம்பம் முதலே லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு லாரிக்கு ரூ.60 ஆக இருந்த கட்டணம் தற்போது, ரூ.120 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதனை கண்டித்து  லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை எப்போதும் லாரி நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்காமல் இன்று சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News