திருச்சி அகதிகள் முகாம்கள் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-30 03:28 GMT

திருச்சி அகதிகள் முகாமில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்றனர்.

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள், கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். இதன்பின்னர் அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.4,000 நிதிஉதவியை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து திருச்சி புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார் அங்கு மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இந் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்கள் உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட கலெக்டர் சிவராசு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News