எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் திருச்சி ஜங்ஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் திருச்சி ஜங்ஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் செங்கிஸ்கான் பிரபு, கௌரவத் தலைவர் சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் நவாப்ஜான், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:
* 2019-2021 இன்று வரை இவ்வுலகமே கொரோனா காலக்கட்டத்தில் இயங்கும் பொழுதும் , உயிரை பொருட்படுத்தாமல் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்ற எங்கள் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் . இதை மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
* மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு எல்.பி.ஜி , சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் நிலைகளை பலமுறை எடுத்துரைத்தும் எவ்வித பயனும் இல்லாத காரணத்தால் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
* 21 வகை தொழிலாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த போதும், எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்காதது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக்கோரி மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
* சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் ஆகிய எங்களை மத்திய தொழிலாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* தொழிலாளர்களின் வருகை பதிவேட்டை நடைமுறை படுத்த வேண்டும். தொழிலாளர்களின் வருகையை தகவல் பலகையில் நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் . தொழிலாளர் நலத்துறைக்கு வருகை பதிவேட்டை சரியான முறையில் நிர்வகித்து விநியோகஸ்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
* தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு வழிகாட்டுதலின் படி, முறைப்படுத்தி வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.
* தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, மருத்துவக்காப்பீடு, விபத்துக்காப்பீடு ஆகியவற்றை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
* தொழிலாளர்களுக்கு பணியினால் ஏற்படும் உடல்நல குறைபாடுகளை ஆய்வு செய்து ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
* தொழிலாளர்களின் பணிச்சுமையின் அளவை ( எடையை கருத்தில் கொண்டு ஊதியத்தை முறைப் படுத்தி வழங்க வேண்டும்.
* தொழிலாளர்களின் வேலை பளுவை கருத்தில் கொண்டு கட்டாயம் வார விடுமுறை மற்றும் மத்திய மாநில அரசு விடுமுறைகளை வழங்க வேண்டும்.
* தொழிற்சங்கத்தின் கருத்தை அறியாமல் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.