திருச்சி மாநகராட்சி 2 வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் கட்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணயின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-09 14:19 GMT

திருச்சி மாநகர பகுதிகளில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் அய்யளம்மன் படித்துறை நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் ஒயமாரி மயானம் அருகில் உந்துக்குழாய் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணி மாநகராட்சியால் நாளை (10ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் (10.06.2021 முதல் 11.06.2021 வரை) வார்டு 62 மற்றும் 65க்குப்பட்ட புகழ் நகர், பாரி நகர், பழைய எல்லைக்குடி, காவேரி நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய 7 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.

12 ம் தேதி அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும்.  பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு

Tags:    

Similar News