மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.

திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.;

Update: 2021-06-25 04:59 GMT

திருச்சி எல்பின் நிறுவனத்தில் நடந்த பண மோசடி தொடர்பாக முறையிட வந்த சிவகாசி ஜெயலட்சுமி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



திருச்சி:

திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கவர்ச்சிகரமான வட்டி வழங்கும் திட்டங்களை அறிவித்தது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், உறுதி அளித்தபடி இந்நிறுவனம் வட்டியையும், பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது வருகிறது.


இந்நிறுவனம் சார்பில், முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகளையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டாம் என்று நிறுவனத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து வருகின்றனர். எனினும் நிறுவனம் சார்பில் பணமும் கொடுக்கப்படவில்லை, உரிய பதிலும் அளிக்கப்படவில்லை என்று முதலீட்டாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், சிவகாசி ஜெயலட்சுமி இன்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எலஃபின் அலுவலகத்திற்கு வந்தார். இவரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது. அதனால் நிறுவனத்தினர் பணத்தை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். அதுவரை வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று கூறி அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல், திருச்சி எல்ஃபின் நிறுவனம் முன் மேலும் பலர் குவிவார்கள் என்பதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News