திருச்சி லாரி உரிமையாளர்கள் சங்கம் : வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி ரயில்வே குட்ஷெட் பகுதியில் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-08 12:58 GMT

லாரிகள் மாதிரி படம் 

திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து கூறுகையில்.

40 வருடகாலமாக குடிசைப்பகுதியில் எங்களது லாரிகளை நிறுத்தி வருகிறோம். ஆனால் தற்போது ரயில்வே நிர்வாகம் அதனை எங்களுக்கு தெரியாமல் டெண்டர் விட்டுள்ளது இதனால் நாங்கள் வழக்கமாக லாரியை நிறுத்தி என்ற இடத்தில் தற்போது லாரி நிறுத்துவதற்கு ஒரு நாளைக்கு ஒரு மாதம் 3, 500 வாடகை கேட்கிறார்கள். அதை எங்களால் தர இயலாது.

மேலும் இந்த நிலை நீடித்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் ஆகவே ரயில்வே நிர்வாகம் எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் ரயில்வே நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும் கலால் வரியை நாங்கள் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News