திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-06-04 06:43 GMT

திருச்சி மாநகரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

திருச்சி மாநகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் நேற்று வரை திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி முக கவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் என 12,494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்குகள் மூலம் 27 லட்சத்து 20 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 69 கார்கள், 182 ஆட்டோக்கள், 5756 வாகனங்கள் என மொத்தம் 6071 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள்அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News