திருச்சியில் ஊரடங்கு சாலைகள் அனைததும் வெறிச்சோடியது

திருச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது..

Update: 2021-05-24 06:12 GMT

திருச்சியில் முழு ஊரடங்கில் சாலைகள் வெறிச்சோடியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துகொண்டே வருகிறது. அதன்  காரணமாக தளர்வுலளுடன் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, தளர்வற்ற ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.மருந்துக்கடை, பால் கடை தவிர மற்ற அனைத்து கடைகளையும் இன்று முதல் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு விடுதிகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மளிகை, காய்கறி என அனைத்துவிதமான கடைகளும் இன்று முதல் அடைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மட்டும் வீடு வீடாக சென்று விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து விதமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது கண்டிப்பாக இ பதிவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் இன்று திருச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. காவலர்கள்  கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவ தேவைகளுக்காக வெளியில் வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஆவணங்களை பரிசோதனை செய்கின்றனர். இந்த வகையில் திருச்சியில் மக்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகனப் போக்குவரத்து இல்லாமலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags:    

Similar News