திருச்சியில் சித்தா மருத்துவ பெட்டகம் பொதுமக்களுக்கு அமைச்சர் நேரு வழங்கினார்
திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்தா மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா மருத்துவ, மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில்சித்தா மருத்துவ மருந்துகள், அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் , உதவி ஆணையர் வினோத், மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன் ,இளங்கோ, மோகன்தாஸ் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்