திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் புதிதாக இன்று 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 18 பேர் உயிரிழந்தனர்.;
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மட்டும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மேலும் 18 பலியானார்.