திருச்சியில் டாக்ஸி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி

திருச்சியில் தனியார் டாக்சி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி யானார்.போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-09-21 16:30 GMT

திருச்சியில் மின்சாரம் தாக்கி இறந்த டிரைவர்  மோகன்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மோகன் (வயது 35). இவர் திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் பந்தடிமால் தெருவில் உள்ள பிரண்ட்ஸ் டாக்ஸி என்ற தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை அந்த அலுவலகத்தில் உள்ள டேபிள் பேனை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென கை உள்ளே மாட்டி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்து போன மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News