டார்ச்லைட்டில் தங்கம் கடத்தல்
டார்ச் லைட்டில் 60.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.25 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தல்: சுங்கத்துறையினர் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளான ஓமான், மஸ்கட், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து பயணிகள் ஏதுமின்றி காலியாக சென்று மேற்கண்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது காரைக்குடியைச்சேர்ந்த அயூப்கான்(30) என்பவர் தான் எடுத்து வந்த டார்ச் லைட்டில் 60.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.25 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தொிய வந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.