திருச்சி மாவட்ட ஆட்சியராக மீண்டும் சிவராசு நியமனம்!
திருச்சி மாவட்டத்தின் கலெக்டராக மீண்டும் சிவராசு நியமனம் செய்யப்பட்டார்.;
திருச்சி கலெக்டர் சிவராசு
திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கலெக்டராக அனீஸ் சேகர், சேலம் கலெக்டராக கார்மேகம், கடலூர் கலெக்டராக பாலசுப்ரமணியன், திருச்சி கலெக்டராக சிவராசு, தர்மபுரி கலெக்டராக திவ்யதர்ஷினி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் திருச்சி கலெக்டராக பணியாற்றிய சிவராசு கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திவ்யதர்ஷினி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது திவ்யதர்ஷினி இடமாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் சிவராசு திருச்சி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.