300 கிலோ சாக்லேட்டுகள் பறிமுதல் :உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி
திருச்சி பெரிய கம்மாள தெருவில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகள் பறிமுதல்.;
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி பெரிய கம்மாள தெருவில் உள்ள 2 கடைகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 2 கடைகளில் குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முகவரி இல்லாமல் இருந்த சுமார் 300 கிலோ சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. அதில் நான்கு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.
இதுபோன்று குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முழு முகவரி இல்லாமல் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.