விவசாயிகளுக்கு திருச்சி விதைகள் ஆய்வு துணை இயக்குனர் வேண்டுகோள்

விதை வாங்கும் போது விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2021-09-29 05:00 GMT

திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் வசந்தா வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகளை வாங்கும்போது விவசாயிகள் மிகுந்த வனத்துடன் வாங்கவேண்டும். விதையின் ரகம், நிலை குவியல், எண் காலாவதி, நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் இருந்து மட்டுமே விவசாயிகள் விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதையின் ரசீதில் மேற்கூறிய விவரங்களை குறிப்பிட்டு விவசாயி மற்றும் விற்பனையாளர் கையொப்பத்துடன் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் விதை விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் விதை விற்றாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலும் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை 0431-2420587, என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News