கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார்
திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது;
திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப் படுகையில், மணல் அள்ளுவதால் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கோட்டைய காவல் துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.
அப்போது, அந்த சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த அந்த ஓட்டுனர், ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். அந்த ஆட்டோவில் ஒரு யூனிட் அளவிற்கான ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதன் உரிமையாளர் பன்னீர் மற்றும் தப்பியோடிய ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.