பிரியங்கா காந்தி கைது கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-10-04 10:45 GMT

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காஙு்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு நேரில்  ஆறுதல் சொல்ல சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உ.பி.போலீசார் தடுத்து கைது செய்தனர்.

உ.பி.பா.ஜ.க. அரசை கண்டித்தும்,  உடனடியாக பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றம் வாயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுசாமி, மாநிலத் துணைத் தலைவர்  சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் மாவட்ட துணைத்தலைவர் முரளி, குமார், மாவட்ட பொதுச்செயலாளர் திலகர், பஜார் மைதீன், ஐ.என்.டி.யு.சி. ரயில் சரவணன், இளைஞர் காங்கிரஸ் விமல்,  மாரியப்பன், மார்க்கெட் சம்சுதீன், மகளிரணி ஜெகதீஸ்வரி, சொக்கலிங்கம், முத்து, குமரேசன், சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News