திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவிப்பு

அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்தார்.;

Update: 2021-09-15 06:30 GMT

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர்  அண்ணாவின்113-வது பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா  உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.2.50 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை காசோலையாக பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, செந்தில், கோவிந்தராஜன், கருணாநிதி, பகுதி செயலாளர் மதிவாணன், சபியுல்லா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தி.மு.க. சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News