திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-04 09:00 GMT

திருச்சி கோட்டை போலீசார் நேற்று சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மேலசிந்தாமணி கொச மேட்டு தெருவைச் சேர்ந்த சதீஷ் என்பதும், அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் 20 மற்றும் பணம் ரூ.150-ஐ பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்த போலீசார், சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News