திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் சிக்கியது
ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் - புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.;
ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல். பிடிபட்ட 6 பேரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் சிறப்பு விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள், சக பயணிகள் போல திருச்சி ஏர்போர்ட்டில் காத்திருந்தனர். அப்போது ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளை அவர்கள் நோட்டமிட்டு சந்தேகத்திற்கு இடமான 6 பேரை மட்டும் தனியாக அழைத்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவர்கள் கடத்தி வந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6 கிலோ தங்கம் சிக்கியது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் தங்கம் கடத்தலில் மேலும் யார்? யாருக்கு? தொடர்புள்ளது? என்பது குறித்து விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.