திருச்சி நெய் குடோனில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை

திருச்சியில் உள்ள நெய் குடோனில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Update: 2021-09-28 10:45 GMT

திருச்சி நெய் குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை  மாவட்ட நியமன அதிகாரியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ்பாபு பொறுப்பேற்றார். அதன்பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை மற்றும் குட்கா பொருட்கள், எண்ணெய் ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றி அதை பதுக்கியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தி கலப்பட எண்ணெய் விற்பனையை தடுத்துள்ளார்.

இந்நிலையில், நெய்யில் கலப்படம் செய்வதாக வந்த புகாரின் பேரில், இன்று காலை பாலக்கரை வேர் ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் நெய் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ்பாபு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நெய் பொருட்களை, ஆய்வுக்கு சாம்பிள் எடுத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, புகார்கள் வந்ததன் அடிப்படையில் குடோனில் இருந்த நெய் சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு அனுப்பி உள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News