திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா.;

Update: 2021-10-02 14:15 GMT

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், உள்ள காந்தி மரத்தடியில் இன்று காலை மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், உள்ள காந்தி மரத்தடியில் இன்று காலை மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதனையடுத்து, எம்பிஏ அரங்கில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, சங்கரா மெட்ரிகுலேசன் பள்ளி, ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் காந்தியின் பாடலை பாடிய பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் முனைவர்.கோ. மீனா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ.கு.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News