தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிக் கொண்ட தூக்கு வாளிகள்..!
தேர்தல் பறக்கும் படை தூக்குவாளிகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 299 சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல்பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 299 சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம், பரிசுப்பொருட்கள் பரிமாற்றம் போன்றவற்றை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி கிழக்கு துணை தாசில்தார் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வழியாக வந்த ஒரு பார்சல் லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 299 சில்வர் தூக்கு வாளிகள் மொத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. அதைத் தொடர்ந்து தூக்குவாளிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.