திருச்சியில் நாளை (11ம் தேதி) குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் பிச்சை நகர் பகுதியில் கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் பம்பிங் ஸ்டேஷன் உள்ளது. இதன் மூலம் சஞ்சீவி நகர் விறகுபேட்டை, ஜெகநாதபுரம், மகாலெட்சுமி நகர் சங்கிலியாண்டபுரம் மற்றும் கல்லுக்குழி ஆகிய 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சாலை விரிவாக்க பணிகளுக்காக சம்மந்தப்பட்ட பம்பிங் ஸ்டேஷனில் மெயின் குழாயினை சாலையோரம் மாற்றியமைக்கும் பணியானது இன்று ,நாளை (11 ம் தேதி) நடைபெறவுள்ளது. இதனால் மேற்படி மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் 11 ம் தேதி மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.