திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருச்சியில் உணவு வணிர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்டது;

Update: 2021-09-08 14:09 GMT

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உணவு வணிகர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமினை இத்துறையின் மாவட்ட நியமான அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார். முகாமில்  நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த முகாமில்  மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய லிங்கம், செயலாளர் கமால் , பொருளாளர் அருண் பாலாஜி, வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெசிமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News