திருச்சியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி இ.பி.ரோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;
திருச்சி இ.பி. ரோடு உப்பிலிய தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாரிமுத்து (வயது 34) கொத்தனார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டு உத்தரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார் .
உடனே அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.