காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை
திருச்சி காந்தி காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்திற்கு இன்று முதல் தடை
திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனோவின் தாக்கம் முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூட கூடிய திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு சிலருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் அங்கு அதிகப்படியான கூட்டம் கூடுவதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. அந்தவகையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் சில்லரை வியாபாரம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
ஜி- கார்னர் மைதானத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என்றும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசங்களை அணிந்தபடி வந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.