திருச்சி-அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;

Update: 2021-09-15 07:15 GMT

திருச்சியில் அண்ணாசிலைக்கு அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

.முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113- வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் சீனிவாசன், ,மாநகர் மாவட்ட துணை செயலாளர் வனிதா,  வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர்  ராஜ்குமார், ஜெ. பேரவை செயலாளர் பத்மநாபன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போர்ட் விஜி, பூபதி, இளைஞரணி ஜவகர்லால் நேரு, குவைத் மனோகரன்   உட்பட பகுதி, வட்ட, அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News