திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியார் பிறந்த நாளான இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் பிறந்த நாளை, சமூக நீதி நாளாக அறிவித்து அவரது பிறந்த நாளில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த நாளில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் உருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, மலர் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்தார்.
அதை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மீண்டும் வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீத்தா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் தமிழ்கனி,சிவசுப்பிரமணியம்பிள்ளை மற்றும் துணை ஆட்சியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.